வணக்கம் நண்பர்களே ?

ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம்! என்றார் பாரதியார். 
ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இருப்பது மேலான வாழ்க்கை. ஆனால் ஜாதிகளும் பிரிவுகளும் இந்துக்களிடம் மட்டும் தான் இருக்கிறதா? கொஞ்சம் சமூகத்தைச் சுற்றிப்பார்த்தால் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது நண்பரே . வாருங்கள்! பாப்போம்!

இந்துக்களிடம் தான் பல பிரிவுகள் இருக்கின்றன என்றும் மற்றவர்கள் எல்லோரும் ஒரே மதம் ஒரே கடவுள் என்ற கொள்கையில் ஒன்றாக ஒற்றுமையாக இருப்பது போன்ற தோற்றத்தை நண்பர்  மகிழ்நன் பா.ம சொன்னார். சினிமாக்காரர்களும் இந்துக்களிடம் இருக்கும் ஜாதிகளை கதையாக வைத்தே படமாக்கி வியாபாரம் செய்கிறார்கள். அதாவது ஜாதி வேற்றுமையை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று மக்களுக்கு போதிப்பார்கள். ஆனால் இவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே ஜாதி சங்கங்களில் சரணடைந்து விடுவார்கள் என்பது வேறு விஷயம்.

எந்த மதமாகினும் பிரிவினைகள் இருப்பதும் அதில் ஏற்றத்தாழ்வுகள் பார்க்கப்படுவதும் மனித குல அமைதிக்கு ஒவ்வாததே. இருப்பினும் ஒரு விழிப்புணர்ச்சிக்காகவாயினும் நாம் பிற மதங்களில் கடைபிடிக்கப்படும் ஜாதீய பிரிவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கையில் என் நண்பர் ஒருவர் கிறிஸ்தவ மதத்தின் பிரிவுகளைப் பற்றி பகிர்ந்துகொண்ட தகவல்களை கொஞ்சம் பார்ப்போம்.

ஒரே கிறிஸ்து, ஒரே பைபிள், ஒரே மதம் என்று சொல்லி எத்தனைப் பிரிவுகள்!

லத்தீன் கத்தோலிக்கர்கள், சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் நுழைய மாட்டார்கள்.

இந்த இரு பிரிவினரும் மார்தோமா சர்ச்சுக்குள் நுழைய மாட்டார்கள்.

இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்ட் சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.

இந்நான்கு பிரிவினரும் (Salvation Army Church) சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.

இந்த ஐந்து பிரிவினரும் சென்வென்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சுக்குள் நுழைவதில்லை.

இந்த ஆறு பிரிவினரும் (Orthodox Church.) ஆர்தோடாக்ஸ் சர்சுக்குள் நுழையமாட்டார்கள்.

இந்த ஏழு பிரிவினரும் (Jacobite church) ஜேகோபைட் சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள். 

இப்படி கிறிஸ்தவர்களில் 146 பிரிவினர்கள் கேரளாவில் மட்டுமே இருக்கிறார்கள் என்கிறது அந்த தகவல்.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால் நாடார் கிறிஸ்தவர்கள், தலித் கிறிஸ்தவர்கள், வன்னியர் கிறிஸ்தவர்கள் என்று மதம் மாறிய பிரிவினர்கள் எல்லோரும் அவர்களது ஜாதியை கிறிஸ்தவ ஜாதியாக மாற்றி ஜாதி கிறிஸ்தவர்களாகவே வாழ்கிறார்கள். இப்படி மதம் மாறிய கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பப் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் போது சொந்தப் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாகவே பார்ப்பதும் நடக்கிறது.

அவ்வளவு ஏன், மாதாவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் ஏசுவை ஏற்றுக் கொள்வதில்லை. ஏசுவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் மாதாவைக் கும்பிடுவதில்லை. இரண்டுமே கிறிஸ்தவத்தின் கடவுள் என்றாலும் இவ்விரண்டு பிரிவினரும் ஏசுவயும் மாதாவையும் பரஸ்பரம் சாத்தான்களை ஏசுவதைப் போல ஏசுவார்கள்.

சில வருடங்களுக்கு முன் ஒரிசாவில் கிறிஸ்தவர்களின் அட்டூழியங்களுக்கு எதிராக இந்துக்களின் எழுச்சி நிகழ்ந்த போது தமிழகத்திலும் பல இடங்களில் சிலுவைகள் நொறுக்கப்பட்டன. தென் தமிழகத்தில் அதிகம் நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவங்களை நடத்தியவர்கள் இந்துக்களே என்று ஊடகங்கள் செய்தி பரப்பின. ஆனால் உண்மையை கூர்ந்து கவனித்த பின்னர் தான் பல இடங்களில் ஏசு சிலையை சேதப்படுத்தியவர்கள் மாதாவைக் கும்பிடுவர்கள் என்றும், பல இடங்களில் மாதா சிலையை சேதப்படுத்தியவர்கள் ஏசுவைக் கும்பிடுபவர்களாக இருந்தார்கள் என்ற உண்மை வெளியே வந்தது. ஆனால் உடனே அந்த விஷயம் பரவாமல் தடுக்கவும் பட்டது. இது செக்யூலரிச நாடாயிற்றே!

கிறிஸ்தவத்தில் பிரிவினை இல்லை என்ற மாயை உடையாமல் பார்த்துக் கொண்டன மத'சார்பு' ஊடகங்கள்.

சரி இனி முஸ்லீம்களின் பிரிவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஏகத்துவம் என்ற பெயரைக் கொண்டு ஒரே கடவுள் ஒரே மதம் என்று கூறும் இஸ்லாத்தில் எத்தனை பிரிவுகள் என்று தகவல்கள் கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றன.
Among Muslims, Shia and Sunni kill each other in all the Muslim countries.
முஸ்லீம்களில் ஷன்னி, ஷியா என்று இரு பெரும் பிரிவுகள் உள்ளன. உலகெங்கிலும் ஒரே கடவுள் தான் என்று சொல்லிக்கொள்ளும் இந்த முஸ்லீம்கள் தம் சக மதத்தவரையே கொன்றுகுவித்து வருகிறார்கள். இன்றைக்கும் பாகிஸ்தானில் மசூதிகளில் குண்டு வெடிப்பதற்கு இதுவே காரணம்.

அநேக மதக்கலவரங்கள் பல முஸ்லீம் நாடுகளிலும் இந்த இரு பிரிவினருக்கு இடையில் தான் நடக்கிறது.

ஷியா முஸ்லீம் ஷன்னி முஸ்லீம்களின் மசூதிக்குச் செல்லமாட்டார். 

இந்த இரு பிரிவினரும் அஹமதியா மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.

இந்த மூன்று பிரிவினரும் சுஃபி மசூதிக்குச் செல்லமாட்டார்கள்

இந்த நான்கு பிரிவினரும் முஜாஹிதீன் மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.

இப்படி முஸ்லீகளிலேயே 13 பிரிவுகள் இருக்கின்றன.

இது மட்டுமா முஸ்லீம்களின் வேறுபல பிரிவினரையும் பார்க்கலாம். (ஆங்கிலத்தில்)

Ansari
Arain
Awan
Bohra
Dawoodi Bohra
Dekkani
Dudekula
Ehle-Hadith
Hanabali
Hanafi
Ismaili
Khoja
Labbai
Lebbai
Lodhi
Malik
Mapila
Maraicar
Memon
Mugal
Mughal
Pathan
Quresh
Qureshi
Rajput
Rowther
Salafi
Shafi
Sheikh
Shia
Siddiqui
Sunni Hanafi
Sunni Malik
Sunni Shafi
Syed

அனுமார்வால் பொன்று நீண்டிருக்கும் இத்தனை ஜாதிகளைக் கொண்ட முஸ்லீம்கள் வேறு ஜாதிகளில் பெண் கொடுக்கவோ எடுக்கவோ மாட்டார்கள். அதிலும் மரைக்காயர் மற்றும் லெப்பைகள் போன்றோர் அரபு முஸ்லீம்கள் என்று கூறிக்கொள்வர். இவர்களைப் பொறுத்தவரை மற்றவர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். ஜாதிகளும் அதில் மேல் கீழ் என்று பிரிவுகளும் முஸ்லீம்களிலும் உண்டு. பட்டாணி முஸ்லீம் பெண்மணியை நாசுவன் ஜாதி ஆணுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார்கள்.

இல்லையென்றால் மேட்ரிமோனியல் தளங்கள் அவர்கள் வசதிக்காக இத்தைனைப் பிரிவுகளை உண்டாக்கி வியாபாரம் செய்ய முன்வருமா என்ன? 

இத்தனைப் பிரிவுகளுக்குள்ளும் நிறைய ஏற்றத்தாழ்வுகள் உண்டு. மைனாரிட்டி என்பதால் வெளியே தெரிவதில்லை அல்லது வெளியே தெரிந்து அவர்களின் ஜாதி வெறி பிம்பங்கள் கலைய ஊடகங்கள் அனுமதிப்பதில்லை என்பதே உண்மை. இந்த சினிமாக்காரர்களும் இத்தகைய மதங்களில் நிகழும் வேற்றுமைகளை வெளிப்படுத்தும் வன்னம் படம் எடுத்து மக்களுக்குக் காட்டியதில்லை.

ஆனால் இவர்கள் வெளியே சொல்லிக் கொள்வதோ ஒரே இறைவன், ஒரே மதம், ஒன்றான மக்கள் என்றுதான். அப்பிரானி இந்தியர்களும் குறிப்பாக இந்துக்களும் இதை நம்பிவிடுகின்றனர். ஐயோ பாவம்!

மொத்தத்தில் எந்த மதத்தில் ஜாதிகளிருந்தாலும் எல்லாவருக்கும் ஒரே பாடல்
"ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்"
- மகாகவி பாரதியார்